ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஆனது, இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள கைபேசி சாதனங்களுக்கு ஒரு கணக்கெடுப்பு இணைப்பினை அனுப்பத் தொடங்கியுள்ளது.
குறுஞ்செய்தி, புலனம் (வாட்ஸ்அப்) மற்றும் மின்னஞ்சல்கள் மூலமாகவும் இந்தக் கணக்கெடுப்பு இணைப்பு அனுப்பப்படுகிறது.
இந்த இணைப்பினைப் பெறுநர்களின் பணியிடங்கள் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு அவர்கள் வழங்கும் ஆதரவு பற்றிய கேள்விகளைக் கொண்ட கேள்வித்தாள் இந்தக் கணக்கெடுப்பு இணைப்பில் அடங்கும்.
இந்தக் கணக்கெடுப்பு இணைப்பில், பெறுநர்கள் அவர்களின் பணியிடங்களை மதிப்பிடுதல், இரவு நேர போக்குவரத்து வசதிகள், பாலியல் துன்புறுத்தல் புகார்களைக் கையாள்வதற்கான உள் நிறுவனக் குழு, குழந்தைப் பராமரிப்பு மையங்கள் மற்றும் பலவற்றைப் பற்றிய வினாக்கள் அடங்கும்.
இந்த “ஊழியர்களின் மதிப்பீடு சார்ந்த கணக்கெடுப்பு ஆனது, குறிப்பிட்ட வசதிகளின் அடிப்படையில் முதலாளிகளின் முன்னேற்றம் மற்றும் முயற்சிகளை மதிப்பிடுவதற்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.