TNPSC Thervupettagam

எஃகு உருக்குக் கசட்டினைப் பயன்படுத்திச் சாலையமைக்கும் தொழில்நுட்பம் குறித்த முதலாவது சர்வதேச மாநாடு

July 14 , 2024 4 days 90 0
  • CSIR-CRRI மற்றும் PHDCCI ஆகியவை இணைந்து எஃகு உருக்குக் கசட்டினை நன்கு பயன்படுத்திச் சாலையமைக்கும் ஒரு தொழில்நுட்பம் குறித்த முதலாவது சர்வதேச மாநாட்டினை புது டெல்லியில் ஏற்பாடு செய்துள்ளது.
  • இந்த நிகழ்வின் போது, ​​சாலைக் கட்டுமானத்தில் எஃகு உருக்குக் கசடுகளை நன்கு பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை நிதி ஆயோக் அமைப்பு வெளியிட்டது.
  • இந்தத் தொழில்நுட்பமானது, எஃகு உற்பத்திக் கழிவுகளை மறு பயன்பாட்டிற்கு நன்கு உட்படுத்தி, வலுவான, நீடித்த மற்றும் சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்த வகையிலான சாலைகளை உருவாக்குகிறது.
  • செயல்முறைக்கு உட்படுத்தப்பட்ட எஃகு உருக்குக் கசடு அதிக வலிமை, கடினத் தன்மை, தேய்மான எதிர்ப்புத் திறன் மற்றும் வடிகால் திறன் ஆகியவற்றை கொண்டு உள்ளது.
  • இதன் மூலம் சுமார் 1.8 பில்லியன் டன்கள் இயற்கையான சாலை அமைப்பு மூலப் பொருட்களுக்கான இந்தியாவின் வருடாந்திரத் தேவையை ஓரளவு பூர்த்தி செய்ய முடியும்.
  • இந்தியாவில் முதல் முறையாக எஃகு உருக்குக் கசட்டினைப் பயன்படுத்தி சூரத்தில் சாலை அமைக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்