தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் (DPIIT) தகவலின் படி, தற்போது நாட்டின் மொத்த எஃகு உற்பத்தித் திறன் ஆனது 154 மில்லியன் டன் (MT) ஆகும்.
இந்தியா 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 10.14 மெட்ரிக் டன் கச்சா எஃகு உற்பத்தி செய்ததன் மூலம் உலகின் இரண்டாவது பெரிய எஃகு உற்பத்தியாளராக மாறியுள்ளது.
உள்நாட்டு உற்பத்தித் திறன்களை மேம்படுத்துவதற்காக, அடுத்த 9-10 ஆண்டுகளில், ஆண்டிற்கு 154 மெட்ரிக் டன்னாக உள்ள கச்சா எஃகு உற்பத்தித் திறனை ஆண்டிற்கு 300 மெட்ரிக் டன்னாக இரட்டிப்பாக்குவதற்கு இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.