எஃகுத் துறைக்கான புதிய உற்பத்தி ஊக்குவிப்புத் திட்டம்
January 11 , 2025 2 days 34 0
மத்திய அரசானது, சுமார் 4,400 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு மொத்த ஒதுக்கீட்டுடன், எஃகுத் துறைக்கான புதிய உற்பத்தி ஊக்குவிப்புத் (PLI) திட்டத்தின் அடுத்தச் சுற்றினை அறிமுகப் படுத்தியுள்ளது.
இந்த முன்னெடுப்பானது, மிக குறிப்பாக பிரத்தியேக எஃகு உற்பத்தியில் அதிக எஃகு நிறுவனங்கள் மற்றும் முதலீடுகளை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
எஃகுத் தொழில் துறைக்கான முதல் PLI திட்டம் சுமார் 6,322 கோடி ரூபாய் என்ற அதிக ஒதுக்கீட்டுடன் அறிமுகப்படுத்தப்பட்டது.
அது 27,106 கோடி ரூபாய் என்ற உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில், 18,300 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை மட்டுமே பெற்றது.