1900 ஆம் ஆண்டுகளில், நைல் நதிக்கரையில் உள்ள கபனாட் எல்-குருத் (குரங்குகளின் பள்ளத்தாக்கு) என்ற இடத்தில் பதனிடப்பட்ட வாலில்லாப் பெருங்குரங்குச் சடலங்கள் கண்டறியப் பட்டன.
அறிஞர்கள் இங்கு ஆச்சரியப் படும் விதமாக வாலில்லாப் பெருங்குரங்கு இனங்களின் 17 மண்டை ஓடுகள் மற்றும் பெரிய அளவிலான எலும்புகளை கண்டெடுத்தனர்.
பதனிடப்பட்ட சடலங்களாக கண்டறியப்பட்ட குரங்குகள் பாபியோ அனுபிஸ் மற்றும் பாபியோ ஹமத்ரியாஸ் ஆகிய இனங்களாகும்.
அவை உண்மையில் ஆப்பிரிக்காவின் துணை சஹாரா பகுதி மற்றும் தென்மேற்கு அரேபிய தீபகற்பம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவை.
மைட்டோகாண்ட்ரியா டிஎன்ஏவைப் பயன்படுத்துவதன் மூலம், இவை இன்றைய கடலோர எரித்திரியாவில் உள்ள பண்டைய நகரமான அடுலிஸ் என்ற பகுதிகளைச் சேர்ந்தவை என்று கண்டறிய முடிந்தது.