TNPSC Thervupettagam
March 29 , 2020 1577 days 535 0
  • சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகமானது ஹைட்ராக்ஸி குளோரோ குயினை அட்டவணை எச் 1(Schedule H1 drug) என்ற வகை மருந்தாக அறிவித்துள்ளது.
  • இந்த உத்தரவு 1940 ஆம் ஆண்டின் மருந்து மற்றும் அழகு சாதனப் பொருட்கள் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப் பட்டது. 
  • இதன் மூலம் இந்த மருந்தின் மீதான விற்பனை மற்றும் விநியோகம் குறித்த கட்டுப்பாடுகளை அரசாங்கம் கொண்டு வந்துள்ளது.
  • அட்டவணை H1 இன் கீழ் பட்டியலிடப்பட்ட மருந்துகள் சிவப்பு நிறத்தில் “Rx” என்று பெயரிடப்பட வேண்டும்.
  • முகப்புச் சீட்டில் (Label) முன்னெச்சரிக்கைகளையும் கொண்டிருக்க வேண்டும்.
  • எச் 1 மருந்துகள் வழங்கப்படுவது தனிப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்