அமெரிக்க நிர்வாகமானது மீண்டும் ஒரு முறை எச்-1பி நுழைவு இசைவு விதிகளைத் திருத்தியுள்ளது.
தற்பொழுது இந்த நுழைவு இசைவு விதிகள் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக உயர் ஊதியம் மற்றும் திறன்களுக்கு முன்னுரிமை அளிக்க உள்ளது.
பணி நுழைவு இசைவுத் தேர்வின் பழைய குலுக்கல் முறை தற்பொழுது பின்பற்றப் பட மாட்டாது.
அமெரிக்காவின் எச்-1பி நுழைவு இசைவு என்பது அமெரிக்க நிறுவனங்கள் அதன் தனித்துவப் பணிகளில் பட்டதாரி நிலையிலான பணியாளர்களைப் பணியமர்த்த அனுமதிக்கும் ஒரு புலம்பெயர்வுத் தன்மையற்ற நுழைவு இசைவு ஆகும்.