TNPSC Thervupettagam

எச்ஐவிஎதிர்ப்புமருந்துகள் – கோவிட் 19

March 21 , 2020 1584 days 494 0
  • மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகமானது கோவிட் – 19 என்ற தொற்றுநோய்க்கான மருந்துகள் மேலாண்மை மீதான திருத்தப்பட்ட அறிவுரைகளை வெளியிட்டுள்ளது.
  • கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ள நபரின் நிலையை (கடுமையான நிலை) பொறுத்து லோபினாவிர் மற்றும் ரிட்டோனாவிர் (கலேத்ரா என்ற குறியீட்டுப் பெயரின் கீழ் விற்பனை செய்யப்படுகின்றது) ஆகிய கலப்பு மருந்துகளைப் பயன்படுத்த இந்த அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
  • இந்தக் கலப்பு மருந்தின் பயன்பாடானது அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த மருத்துவர்கள், தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையத்தைச் சேர்ந்த வல்லுநர்கள் மற்றும் உலகச் சுகாதார அமைப்பைச் சேர்ந்த வல்லுநர்கள் ஆகியோரைக் கொண்டவல்லுநர் குழுவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
  • லோபினாவிர்ரிட்டோனாவிர் மருந்துகள் நீரிழிவு நோய், சிறுநீரகச் செயலிழப்பு, நாள்பட்ட நுரையீரல் நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள 60 வயதிற்கும் மேற்பட்ட அதிக ஆபத்தை எதிர்நோக்கியுள்ள நோயாளிகள் மற்றும் அதிக நோய்எதிர்ப்புச் சக்தி தேவைப்படும் நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கப்படுகின்றது.
  • லோபினாவிர்ரிட்டோனாவிர் ஆனது பெரும்பாலும் எச்ஐவி தொற்றைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்