எடில்மேன் உளவுப் பிரிவால் 2019 ஆம் ஆண்டின் எடில்மேன் நம்பிக்கை குறியீட்டு அறிக்கை வெளியிடப்பட்டிருக்கின்றது.
இது வர்த்தகம், அரசாங்கம், ஊடகம் மற்றும் அரசு சாரா அமைப்புகளில் உள்ள நம்பிக்கைக்கான கோட்பாடுகள் மீது கவனம் செலுத்தும் முக்கியப் பிரமுகர்களின் கருத்துகள் மீது அமைந்திருக்கும் ஒரு சர்வதேச ஆய்வாகும்.
இந்த கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் அந்த அறிக்கை ஒரு உலகளாவிய நம்பிக்கை குறியீட்டைத் தயாரிக்கின்றது.
அதில் உள்ள முக்கிய தகவல்கள் பின்வருமாறு
அரசாங்கம், வர்த்தகம், அரசு சாரா அமைப்புகள் மற்றும் ஊடகம் என்று வரும் போது இந்தியா உலகளவில் ஒரு மிகுந்த நம்பிக்கையான நாடுகளில் ஒன்றாகும். ஆனால் இந்தியாவின் உற்பத்திகள் குறைவான நம்பிக்கையைப் பெற்றவையாகும்.
தகவலளிக்கப்பட்ட பொது மக்கள் பிரிவில் இந்தியா இரண்டாவது இடத்திலும் பொதுவான மக்கள் பிரிவில் மூன்றாவது இடத்திலும் உள்ளது. இவ்விரு பிரிவுகளிலும் சீனா முதலிடத்தில் உள்ளது.
சுவிட்சர்லாந்து, ஜெர்மனி மற்றும் கனடாவில் தலைமையகம் அமையப் பெற்ற நிறுவனங்கள் மிகுந்த நம்பிக்கைக்கு உரியவையாகும்.
இந்தியா, மெக்சிகோ மற்றும் பிரேசில் ஆகியவற்றில் தலைமையகம் அமையப் பெற்ற நிறுவனங்கள் குறைவான நம்பிக்கையைக் கொண்டவையாகும். இதனைத் தொடர்ந்து சீனா மற்றும் தென் கொரியா ஆகியன உள்ளன.