TNPSC Thervupettagam

எடெல்மேன் நம்பிக்கை மதிப்பீட்டுமானி 2024

January 22 , 2024 307 days 224 0
  • வணிகங்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மீதான நம்பிக்கையின் அடிப்படையிலான தரவரிசையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
  • ஆனால் ஊடகங்கள் மீதான நம்பிக்கையின் அடிப்படையில் நான்காவது இடத்திலும் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையின் அடிப்படையில் ஐந்தாவது இடத்திலும் உள்ளது.
  • சவூதி அரேபியா அரசாங்கத்தின் மீது மக்கள் காட்டும் நம்பிக்கையின் அடிப்படையில் முதலிடத்திலும், சீனா ஊடகங்கள் மீதான நம்பிக்கை அடிப்படையில் முதலிடத்திலும் உள்ளன.
  • ஒருவரின் முதலாளி மீது காட்டப்படும் நம்பிக்கையின் அடிப்படையில், இந்தோனேசியா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன.
  • ஐக்கியப் பேரரசு ஆனது, தென் கொரியாவை விஞ்சி மிகக் குறைந்த நம்பிக்கை கொண்ட நாடாக மாறியுள்ளது.
  • 61% உலகளவில் அரசாங்கத் தலைவர்கள் வேண்டுமென்றே தவறான தகவல்களைப் பரப்புவதைப் பற்றி கவலை கொள்கின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்