வணிகங்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மீதான நம்பிக்கையின் அடிப்படையிலான தரவரிசையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
ஆனால் ஊடகங்கள் மீதான நம்பிக்கையின் அடிப்படையில் நான்காவது இடத்திலும் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையின் அடிப்படையில் ஐந்தாவது இடத்திலும் உள்ளது.
சவூதி அரேபியா அரசாங்கத்தின் மீது மக்கள் காட்டும் நம்பிக்கையின் அடிப்படையில் முதலிடத்திலும், சீனா ஊடகங்கள் மீதான நம்பிக்கை அடிப்படையில் முதலிடத்திலும் உள்ளன.
ஒருவரின் முதலாளி மீது காட்டப்படும் நம்பிக்கையின் அடிப்படையில், இந்தோனேசியா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன.
ஐக்கியப் பேரரசு ஆனது, தென் கொரியாவை விஞ்சி மிகக் குறைந்த நம்பிக்கை கொண்ட நாடாக மாறியுள்ளது.
61% உலகளவில் அரசாங்கத் தலைவர்கள் வேண்டுமென்றே தவறான தகவல்களைப் பரப்புவதைப் பற்றி கவலை கொள்கின்றனர்.