TNPSC Thervupettagam

எடை இழப்பு மருந்து – டிர்செபடைடு

July 22 , 2024 10 hrs 0 min 66 0
  • இந்தியாவின் மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பின் (Central Drugs Standard Control Organisation - CDSCO) நிபுணர் குழுவானது, டிர்செபடைடு என்ற ஒரு மருந்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.
  • டிர்செபடைடு என்பது யெலி லில்லி மற்றும் கம்பனி என்ற ஒரு நிறுவனத்தினால் உருவாக்கப் பட்ட முதன்மையாக இரண்டாம் வகை நீரிழிவு நோய்க்குச் சிகிச்சை அளிக்கப் பயன்படுகின்ற ஒரு மருந்தாகும்.
  • இந்த மூலக்கூறுக் கலவையானது நீரிழிவு நோய்க்கான மௌஞ்சாரோ மற்றும் எடை இழப்புக்கான ஷெப்பெளண்ட் என்ற தயாரிப்புப் பெயர்களில் விற்கப்படுகிறது.
  • இருப்பினும், டிர்செபடைடு மருந்தானது இந்தியாவில் எடை இழப்பு மருந்தாக அல்லாமல் நீரிழிவு நோய்க்கான ஒரு மருந்தாக இறக்குமதி செய்யப்பட்டுச் சந்தைப் படுத்தப் படும்.
  • டிர்செபடைடு உணவுக்குப் பின்பு கணையத்தில் இருந்து இன்சுலின் சுரப்பினைத் தூண்டுகிறது.
  • இது உணவு உண்ட பிறகு இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.
  • இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் குளுகோகன் எனப்படும் ஹார்மோன் சுரப்பினைக் குறைக்கிறது.
  • கடந்த ஆண்டு, இளம்பருவத்தினரின் உடல் பருமனை எதிர்க்கின்ற, ஊசி வழியாக செலுத்திக் கொள்ள பரிந்துரைக்கப்படும் ஷெப்பெளண்ட் மருந்து, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தினால் அங்கீகரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்