இந்தியாவின் மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பின் (Central Drugs Standard Control Organisation - CDSCO) நிபுணர் குழுவானது, டிர்செபடைடு என்ற ஒரு மருந்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.
டிர்செபடைடு என்பது யெலி லில்லி மற்றும் கம்பனி என்ற ஒரு நிறுவனத்தினால் உருவாக்கப் பட்ட முதன்மையாக இரண்டாம் வகை நீரிழிவு நோய்க்குச் சிகிச்சை அளிக்கப் பயன்படுகின்ற ஒரு மருந்தாகும்.
இந்த மூலக்கூறுக் கலவையானது நீரிழிவு நோய்க்கான மௌஞ்சாரோ மற்றும் எடை இழப்புக்கான ஷெப்பெளண்ட் என்ற தயாரிப்புப் பெயர்களில் விற்கப்படுகிறது.
இருப்பினும், டிர்செபடைடு மருந்தானது இந்தியாவில் எடை இழப்பு மருந்தாக அல்லாமல் நீரிழிவு நோய்க்கான ஒரு மருந்தாக இறக்குமதி செய்யப்பட்டுச் சந்தைப் படுத்தப் படும்.
டிர்செபடைடு உணவுக்குப் பின்பு கணையத்தில் இருந்து இன்சுலின் சுரப்பினைத் தூண்டுகிறது.
இது உணவு உண்ட பிறகு இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.
இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் குளுகோகன் எனப்படும் ஹார்மோன் சுரப்பினைக் குறைக்கிறது.
கடந்த ஆண்டு, இளம்பருவத்தினரின் உடல் பருமனை எதிர்க்கின்ற, ஊசி வழியாக செலுத்திக் கொள்ள பரிந்துரைக்கப்படும் ஷெப்பெளண்ட் மருந்து, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தினால் அங்கீகரிக்கப்பட்டது.