TNPSC Thervupettagam

எட்டா அக்வாரிட் விண்கல் பொழிவு

May 10 , 2024 69 days 131 0
  • ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் பொழியத் தொடங்கிய எட்டா அக்வாரிட் என்ற விண்கல் பொழிவானது, மே 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் உச்சத்தில் இருந்தது.
  • இவை பூமியின் வளிமண்டலத்தில் வினாடிக்கு 66 கி.மீ. (2.37 லட்சம் கி.மீ.) வேகத்தில் நகரும் எரியும் விண்வெளிக் குப்பைகளை உள்ளடக்கியது.
  • இந்த விண்கல் பொழிவானது ஒவ்வோர் ஆண்டும் மே மாதத்தில் நிகழ்கிறது.
  • எட்டா அக்வாரிட் விண்கல் பொழிவானது அதன் விரைவான வேகத்திற்கு பெயர் பெற்றது என்ற நிலையில் இது பல நிமிடங்கள் வரையில் நீடிக்கும் நீண்ட, ஒளிரும் ஒளிக்கற்றைகளை உருவாக்குகிறது.
  • தென் அரைக்கோளத்தில் உள்ள இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அவை புலப்படும்.
  • சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நமது சூரிய குடும்பம் உருவானதில் இருந்து உறைந்த எஞ்சியிருக்கும் வால் நட்சத்திரங்களில் இருந்து இந்த விண்கற்கள் பொழிகின்றன.
  • வால் நட்சத்திரங்கள் தூசி, பாறை மற்றும் பனிக்கட்டிகளால் ஆனவை என்பதோடு அவை உயர்நிலை நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி வருகின்றன.
  • சில சந்தர்ப்பங்களில், அவை தனது சுற்றுப் பாதையினை நிறைவு செய்வதற்கு நூறாயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகும்.
  • நாசாவின் கூற்றுப்படி, மொத்தம் 3,910 வால் நட்சத்திரங்கள் தற்போது கண்டறியப் பட்டுள்ளன.
  • நெப்டியூனுக்கு அப்பால் அமைந்த, குய்பர் மண்டலம் மற்றும் இன்னும் தொலைவில் அமைந்த ஊர்ட் மேகம் ஆகியவற்றில் மேலும் பல பில்லியன் வால் நட்சத்திரங்கள் சூரியனைச் சுற்றி வருவதாகக் கருதப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்