ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் பொழியத் தொடங்கிய எட்டா அக்வாரிட் என்ற விண்கல் பொழிவானது, மே 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் உச்சத்தில் இருந்தது.
இவை பூமியின் வளிமண்டலத்தில் வினாடிக்கு 66 கி.மீ. (2.37 லட்சம் கி.மீ.) வேகத்தில் நகரும் எரியும் விண்வெளிக் குப்பைகளை உள்ளடக்கியது.
இந்த விண்கல் பொழிவானது ஒவ்வோர் ஆண்டும் மே மாதத்தில் நிகழ்கிறது.
எட்டா அக்வாரிட் விண்கல் பொழிவானது அதன் விரைவான வேகத்திற்கு பெயர் பெற்றது என்ற நிலையில் இது பல நிமிடங்கள் வரையில் நீடிக்கும் நீண்ட, ஒளிரும் ஒளிக்கற்றைகளை உருவாக்குகிறது.
தென் அரைக்கோளத்தில் உள்ள இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அவை புலப்படும்.
சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நமது சூரிய குடும்பம் உருவானதில் இருந்து உறைந்த எஞ்சியிருக்கும் வால் நட்சத்திரங்களில் இருந்து இந்த விண்கற்கள் பொழிகின்றன.
வால் நட்சத்திரங்கள் தூசி, பாறை மற்றும் பனிக்கட்டிகளால் ஆனவை என்பதோடு அவை உயர்நிலை நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி வருகின்றன.
சில சந்தர்ப்பங்களில், அவை தனது சுற்றுப் பாதையினை நிறைவு செய்வதற்கு நூறாயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகும்.
நாசாவின் கூற்றுப்படி, மொத்தம் 3,910 வால் நட்சத்திரங்கள் தற்போது கண்டறியப் பட்டுள்ளன.
நெப்டியூனுக்கு அப்பால் அமைந்த, குய்பர் மண்டலம் மற்றும் இன்னும் தொலைவில் அமைந்த ஊர்ட் மேகம் ஆகியவற்றில் மேலும் பல பில்லியன் வால் நட்சத்திரங்கள் சூரியனைச் சுற்றி வருவதாகக் கருதப் படுகிறது.