- ஆசியா மற்றும் பசுபிக் பகுதியின் பிராந்திய 3R மன்றத்தினுடைய (Regional 3R Forum in Asia and Pacific) எட்டாவது சந்திப்பு மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்றுள்ளது.
- ஆசியா மற்றும் பசுபிக் பகுதியின் பிராந்திய 3R மன்றத்தினுடைய (Regional 3R Forum in Asia and Pacific) எட்டாவது சந்திப்பு மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்றுள்ளது.
- ஆசியா மற்றும் பசுபிக் பகுதியின் பிராந்திய 3R மன்றத்தின் எட்டாவது பதிப்பின் கருத்துரு “3R-கள் மற்றும் மூல ஆதாரத்திறன் மூலம் தூய நீர், தூய நிலம் மற்றும் தூய காற்றை அடைதல்- ஆசிய-பசுபிக் சமுதாயத்திற்கான 21 ஆம் நூற்றாண்டுத் தொலைநோக்கு” (“Achieving Clean Water, Clean Land and Clean Air through 3R and Resource Efficiency – A 21st Century Vision for Asia-Pacific Communities”)
- பிராந்திய மேம்பாட்டிற்கான ஐக்கிய நாடுகள் மையம் (United Nations Centre for Regional Development-UNCRD), ஜப்பான் நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சகம், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் (Ministry of Housing and Urban Affairs) ஆகியவை கூட்டிணைந்து இம்மாநாட்டினை நடத்தியுள்ளன.
- மத்தியப்பிரதேச அரசாங்கம், இந்தூர் மாநகராட்சி கார்ப்பரேஷன், மற்றும் இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு (Confederation of Indian Industry-CII) ஆகியவை முறையே இச்சந்திப்பின் மாநில பங்களிப்பாளர், நகர பங்களிப்பாளர் மற்றும் தொழிற்துறை பங்களிப்பாளர் அமைப்புகளாகும்.
- கொள்கைகள், திட்டமிடல் மற்றும் மேம்பாடு ஆகியவற்றில் குறைப்பு (Reduce), மறுபயன்பாடு (Reuse), மற்றும் மறுசுழற்சி (Recycle) ஆகிய 3R-களை ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 2009 ஆம் ஆண்டு ஆசியா மற்றும் பசுபிக்கிற்கான பிராந்திய 3R மன்றம் தொடங்கப்பட்டது.
பிராந்திய மேம்பாட்டிற்கான ஐக்கிய நாடுகள் மையம்
- ஐ.நா. அமைப்பின் இரண்டாவது பத்தாண்டு கால மேம்பாட்டு உத்திகளை (Strategy for Second United Nations Development Decade) அடைவதற்கு உதவி புரிவதற்கான ஓர் செயற்கருவியாக (Instrument) 1971 ஆம் ஆண்டு பிராந்திய மேம்பாட்டிற்கான ஐக்கிய நாடுகள் மையம் அமைக்கப்பட்டது.
- ஐக்கிய நாடுகள் அவை மற்றும் ஜப்பான் அரசிற்கு இடையேயான ஒப்பந்தத்தின் மூலம் பிராந்திய மேம்பாட்டிற்கான ஐக்கிய நாடுகள் மையம் (The United Nations Centre for Regional Development-UNCRD) உருவாக்கப்பட்டது.
- ஐ.நா அமைப்பின் பொருளாதார மற்றும் சமூக விவகாரத் துறையானது (UN Department of Economic and Social Affairs UN-DESA) UNCRD-ன் செயல்பாடுகளுக்கு ஆதரவு அளிக்கின்றது.