ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் அணி வகுப்புக் காட்சி வாகனமானது எட்டிகொப்பகா பொம்மைகள் எனப்படும் பண்டைய மர பொம்மைகள் உருவாக்கக் கலையினைச் சித்தரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
இது சுற்றுச்சூழலுக்கு உகந்தப் படைப்பாற்றல் மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்திற்கு ஒத்ததாக மாறியுள்ள 400 ஆண்டுகள் பழமையான கைவினைப் பொருளாகும்.
தென்கிழக்கு ஆந்திரப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு மிகவும் சிறிய கிராமமான எட்டிகொப்பகாவில், கைவினைஞர்கள் இந்தப் பொம்மை தயாரிக்கும் மிகப்பெரும் பாரம்பரியத்தை குறையின்றி முழுமை பெறச் செய்துள்ளனர்.
மிகப்பெரும்பாலும் புராணக் கதைகள் அல்லது விலங்குகளைச் சித்தரிக்கும் இந்தப் பொம்மைகள், அவற்றின் குறையற்ற வளைவுகள், சிறப்பான நிறச் சாயல்கள் மற்றும் நுட்பமான வடிவமைப்பிற்காக / விவரங்களுக்காக நீண்ட காலமாகத் தனித்துப் புகழ் பெற்றுள்ளன.