மத்திய அரசின் அமைச்சகங்களுக்கிடையேயான ஒப்புதல் அளிக்கும் குழுவானது தமிழகத்தில் செயல்படுத்தப்பட இருக்கும் எட்டு உணவுப் பதப்படுத்தும் திட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளது.
மத்திய உணவுப் பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சகத்தின் பிரதான் மந்திரி கிசான் சம்பாடா யோஜனாவின் (Pradhan Mantri Kisan SAMPADA Yojana - PMKSY) வேளாண் பதப்படுத்துதல் தொகுப்புத் திட்டத்தின் கீழ் இந்தத் திட்டங்கள் அங்கீகரிக்கப் பட்டுள்ளன.
PMKSYன் நோக்கம் வேளாண்மைக்குத் துணைபுரிதல், பதப்படுத்துதலை நவீனமயமாக்கல் மற்றும் வேளாண் கழிவுகளைக் குறைத்தல் ஆகியவையாகும்.