TNPSC Thervupettagam

எட்டு முதன்மையான தொழிற்துறைகளின் குறியீடு

July 5 , 2018 2336 days 820 0
  • வர்த்தக அமைச்சகத்தினால் வெளியிடப்பட்ட எட்டு முதன்மையான தொழிற்துறைகளின் குறியீட்டின்படி எட்டு உட்கட்டமைப்பு தொழில் துறைகளின் வளர்ச்சியானது 10 மாத வீழ்ச்சியாக 3.6 % அளவிற்கு மே, 2018-ல் தாழ்ந்துள்ளது.
  • இதற்கு கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் உற்பத்தியில் ஏற்பட்ட சரிவே ஒரு முக்கிய காரணமாகும்.
  • 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் எட்டு முக்கிய உட்கட்டமைப்பு தொழில்துறைகளின் குறியீடு 9% அளவிற்கு சரிவை சந்தித்தப்பின் ஏற்பட்ட மிகவும் குறைந்த வளர்ச்சி வீதம் இதுவே ஆகும் .
  • ஏப்ரல் 2018-ல் பதிவு செய்யப்பட்ட வளர்ச்சி விகிதமானது 4.6% என்ற அதிக அளவில் இருந்தது.
  • முக்கியத் தொழில்துறைகளை பொருளாதாரத்தின் முக்கிய அல்லது ஆதார தொழில்துறைகளாக வரையறுக்கலாம்.
  • இந்தியாவில் நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள், உரங்கள், எஃகு, சிமெண்ட் மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளை உள்ளடக்கிய எட்டு முக்கிய தொழில்துறைகள் உள்ளன.
  • எட்டு முக்கிய உட்கட்டமைப்பு துறைகள் மொத்த தொழில்துறை உற்பத்திக் குறியீட்டில் 40.27% கொண்டிருக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்