இந்தியாவின் மிகப்பெரிய நிதியியல் சேவைகளுக்கான செயலியான எட்மணியானது (ETMONEY) ஒருங்கிணைந்த பண வழங்கீடு முகமை (Unified Payment Interface UPI) என்ற அமைப்புடன் ஒரு பணவழங்கீடு முறையாக இணைந்துள்ளது.
2019 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அதன் மாதாந்திரப் பயனாளர்களின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக மாற்றுவதே இதன் நோக்கமாகும்.
இந்த ஒருங்கிணைப்பானது மில்லியன் கணக்கான எட்மணி பயனர்களுக்கு பரஸ்பர நிதிப் பண வழங்குதலை எளிதாக்குகிறது.
எட்மணி செயலியானது டைம்ஸ் குழுவின் ஒரு பகுதியான டைம்ஸ் இணையத் தளத்திற்கு சொந்தமானதாகும்.