இந்திய நில அளவைத் துறை அமைப்பானது, பல பெருநகரங்கள் மற்றும் சிறு நகரங்களின் முப்பரிமாண வரைபடங்களைத் தயாரிப்பதற்காக என்று மும்பையைச் சேர்ந்த ஜெனிசிஸ் இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளது.
‘எண்ணிம இரட்டை’ என்று அழைக்கப்படுகிற இது இத்தகைய முதல் வகையிலான ஒரு முன்னெடுப்பு ஆகும்.
இந்த வரைபடங்களின் நகர முப்பரிமாணக் காட்சிகளுடன் உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்களை இணைத்தால், பல்வேறு திட்டமிடல் பயன்பாடுகளில் இதனைப் பயன்படுத்தலாம்.
இதுவரை, இந்த நிறுவனம் ஆனது அயோத்தி, மும்பை தாராவியில் உள்ள குடிசைப் பகுதிகள், கொச்சி மற்றும் கான்பூரில் எண்ணிம இரட்டைகளை உருவாக்கியுள்ளது.