யுனிசெப் அமைப்பின் ஒரு அறிக்கையின் படி, உலகளவில் ஆண்களை விட சுமார் 327 மில்லியன் என்ற குறைவான அளவிலான பெண்களே திறன்பேசிகளை வைத்துள்ளனர் மற்றும் கைபேசி வழி இணையச் சேவையினை அணுகக் கூடிய நிலையில் உள்ளனர்.
ஆண்களை விடச் சராசரியாக 26 சதவீதத்திற்குக் குறைவான அளவிலான பெண்களே திறன்பேசிகளை வைத்திருக்கின்றனர்.
தெற்காசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இந்த விகிதம் முறையே 70% மற்றும் 34% ஆக உள்ளது.
உலக நாடுகளின் எண்ணிம உலகில் இணையப் பயன்பாட்டில் நிலவுகின்ற பாலின வேறுபாடு ஆனது 2013 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் கிட்டத்தட்ட 11% என்ற அளவில் மாறாமல் இருந்தது.
பொருளாதார மற்றும் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளில் உள்ள, 15 வயதிலான 5% சிறுவர்களுடன் ஒப்பிடுகையில், சராசரியாக 0.5% சிறுமிகள் மட்டுமே தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களாக மாற விரும்புகிறார்கள்.
2015 ஆம் ஆண்டில், ஆண்களை விட பெண்களே அதிகமாக உயர்நிலைக் கல்வியை நிறைவு செய்துள்ளனர்.
பொறியியல், உற்பத்தி மற்றும் கட்டுமானத் துறையில் பட்டம் பெற்றவர்களில் 24% மட்டுமே பெண்கள் ஆவர் என்பதோடு, தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பத் துறையில் அவர்களின் பங்கு வெறும் 25% மட்டுமே ஆகும்.
2015 ஆம் ஆண்டில் சுமார் 120 மில்லியனாக இருந்த இந்தியாவின் இயங்கலை பயனர் அளவானது 2020 ஆம் ஆண்டில், 300 மில்லியனுக்கும் அதிகமாக அதிகரிக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது.