TNPSC Thervupettagam

எண்ணிம ஊடக விளம்பரக் கொள்கை, 2023

November 17 , 2023 247 days 192 0
  • இந்திய அரசானது, 2023 ஆம் ஆண்டு புதிய எண்ணிம ஊடக விளம்பரக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இது சமூக ஊடகங்கள், இணையவழி ஒளிபரப்பு சேவை இயங்குதளங்கள் மற்றும் பிற எண்ணிம ஊடகங்களில் விளம்பரப் பிரச்சாரங்களை மேற்கொள்ள மத்திய தகவல் தொடர்புப் பணியகத்திற்கு (CBC) அனுமதிக்கிறது.
  • இது அரசாங்கத் தகவல் தொடர்பிற்காக எண்ணிம ஊடகத்தின் திறனை நன்கு திறம்பட பயன்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும்.
  • இணைய தளங்களோடு சேர்த்து கைபேசி செயலிகளில் மேற்கொள்ளப்படும் பல்வேறு பிரச்சாரங்களுக்கும் இந்தக் கொள்கை பொருந்தும்.
  • இணையதளங்கள், கைபேசி செயலிகள், இணையவழி ஒளிபரப்பு சேவை இயங்கு தளங்கள் மற்றும் எண்ணிம ஒலிபரப்பு சேவை இயங்குதளங்கள் ஆகியவை இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தகுதி பெறுவதற்கு குறைந்தபட்சம் ஒரு வருடம் பழமையானதாக இருக்க வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்