TNPSC Thervupettagam

எண்ணிம சுகாதாரச் சேவைக்கான உலகளாவிய முன்னெடுப்பு

August 24 , 2023 333 days 179 0
  • மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா ‘எண்ணிம சுகாதாரச் சேவைக்கான உலகளாவிய முன்னெடுப்பினை’ தொடங்கி வைத்துள்ளார்.
  • GIDH என்பது G-20 அமைப்பிற்கான இந்தியாவின் தலைமைத்துவத்தின் கீழான முக்கிய உறுதியளிப்புகளில் ஒன்றாகும்.
  • இது ஆதாரங்களை ஒருங்கிணைத்து "உலகளாவிய எண்ணிம சுகாதாரச் சேவைகளில் கிடைக்கப் பெற்ற சமீபத்திய மற்றும் கடந்த கால ஆதாயங்களைப் பெருக்கும்".
  • GIDH ஆனது சவால்களை எதிர்கொள்வதன் மூலம் எண்ணிம சுகாதாரச் சேவைக்கான ஒரு சமமான அணுகலை ஊக்குவிக்கும் வகையிலான, உலக சுகாதார அமைப்பினால் மேலாண்மை செய்யும் வலையமைப்பாக இருக்கும்.
  • இது 2020–2025 ஆம் ஆண்டு எண்ணிம சுகாதாரச் சேவைக்கான உலகளாவிய உத்தியை செயல்படுத்துவதற்கான ஆதரவினை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்