TNPSC Thervupettagam

எண்ணிம பாரத் நிதி

July 21 , 2024 5 hrs 0 min 10 0
  • தொலைத்தொடர்புத் துறை (DoT) ஆனது, கிராமப்புறங்களில் தொலைத்தொடர்பு இணைப்பினை அதிகரிப்பதற்காக, எண்ணிம பாரத் நிதியை பயன்படுத்துவதற்கான வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது.
  • இது முந்தையப் பொதுச் சேவைக் கட்டுப்பாட்டு நிதிக்கு (USOF) பதிலாக கொண்டு வரப்பட்டுள்ளது.
  • USOF என்பது அனைத்துத் தொலைத்தொடர்பு நிதிக் கட்டுப்பாட்டு அமைப்புகள் தங்களின் ஈடு செய்யப்பட்ட மொத்த வருவாயில் (AGR) வசூலிக்கும் 5 சதவீதப் பொது சேவை வரிவிதிப்பு மூலம் உருவாக்கப்பட்ட நிதிகளின் தொகுப்பாகும்.
  • எண்ணிம பாரத் நிதிக்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செய்யும் பங்களிப்புகள் முதலில் இந்தியாவின் ஒருங்கிணைந்த தொகுப்பு நிதியில் (CFI) வரவு வைக்கப்படும்.
  • 2017 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், அரசாங்கம் ஆனது USOF நிதிக்காக 41,740 கோடி ரூபாயினை வசூலித்துள்ளது, அதில் சுமார் 72 சதவீதம் அதாவது 30,213 கோடி ரூபாயினைப் பயன்படுத்தியுள்ளது.
  • குறிப்பாக, 2019-20 ஆம் ஆண்டில், இந்த வசூல் ஆனது 7,962 கோடி ரூபாயாக இருந்தது என்பதோடு இதில் பயன்படுத்தப்பட்ட தொகை வெறும் 2,926 கோடி ரூபாயாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்