அஞ்சல் துறையானது, எண்ணிம முறையிலான அஞ்சல் குறியீட்டு எண் (DIGIPIN) என்று குறிப்பிடப்படும் தேசிய முகவரி உருவாக்கக் கட்டமைப்பினை உருவாக்குவதற்கு ஐதராபாத்தின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்துடன் இணைந்துள்ளது.
இந்த அமைப்பானது, புவியிடம் சார் மேலாண்மையின் வலுவான மற்றும் உறுதியான தூணாக செயல்படும்.
இது பொதுச் சேவை வழங்கல், விரைவான அவசரகால எதிர் நடவடிக்கை மற்றும் தளவாட செயல்திறனுக்கான குறிப்பிடத்தக்க ஊக்கம் ஆகியவற்றினை மிகவும் நன்கு மேம்படுத்துகிறது.
இது அனைவரும் எளிதாக அணுகக் கூடிய வகையில் பொது களத்தில் முழுமையாகக் கிடைக்கப் பெறும்.