கைபேசி இடைமுகம் வழியாக பயிர் விதைப்பு விவரங்களைச் சேகரிப்பதற்காக என வயலில் இருந்து நேரடியாகத் தரவுகள் பெறப்படுவதை உறுதி செய்கின்ற எண்ணிம வழி பயிர்க் கணக்கெடுப்பு (DCS) அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.
இந்த தரவுத் தளம் ஆனது, ஒவ்வொரு வேளாண் நிலத்திற்கும் துல்லியமான, நிகழ்நேர பயிர் பரப்பளவுத் தகவல்களை வழங்குகிறது என்பதோடு இது துல்லியமான உற்பத்தி மதிப்பீட்டை அடைய உதவும்.
14 மாநிலங்களில் உள்ள 435 மாவட்டங்களில் உள்ள 3 லட்சம் கிராமங்களில் 23 கோடி நிலங்கள் மதிப்பிடப்பட்டுள்ளன/வரைபடமாக்கப்பட்டுள்ளன.
பயிர் விதைப்பு பரப்பின் கையேட்டு மதிப்பீட்டிலிருந்துப் பதிவான ஏக்கர் பரப்பில் 19 சதவீதம் அதிகரிப்பு பதிவாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், அசாம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய சில மாநிலங்கள் ஒவ்வொன்றும் கடந்த ஆண்டின் காரீஃப் பருவத்தில் தங்கள் இலக்கு நிலங்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமான நிலங்களின் மதிப்பீட்டினை நிறைவு செய்து ஒரு சிறப்பான செயல்திறன் கொண்ட மாநிலங்களாக உள்ளன.
குஜராத் மற்றும் ஒடிசா ஆகிய இரு மாநிலங்களும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 50 சதவீதத்திற்கும் அதிகமான நிலங்களின் மதிப்பீட்டினை நிறைவு செய்துள்ளன.