TNPSC Thervupettagam

எண்ணியல் பொதுக் கடன் பதிவேடு

November 7 , 2018 2082 days 625 0
  • இந்திய ரிசர்வ் வங்கி அனைத்துக் கடனாளிகளின் தகவல்களையும் பதிவு செய்ய ஒரு பரந்த எண்ணியல் பொதுக் கடன் பதிவேட்டை (digital Public Credit Registry) ஏற்படுத்தும் நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கின்றது.
  • இப்பதிவேடு தன்னிச்சையாக தவறிழைத்தவர்களையும், நிலுவையிலிருக்கும் சட்ட வழக்குகளையும் கொண்டிருக்கும்.
  • இந்த நடவடிக்கைக்கான நோக்கம் நிதியியல் ரீதியான தவறிழைப்புகளை தடுப்பதாகும்.
  • இப்பதிவேடு கீழ்க்கண்டவற்றில் இருந்து தகவல்களைக் கொண்டிருக்கும்.
    • செபி போன்ற சந்தை கட்டுப்பாட்டாளர்கள்
    • மத்திய பெருநிறுவன விவகாரத்துறை அமைச்சகம்
    • சரக்கு மற்றும் சேவை வரி வலையமைப்பு
    • இந்திய திவால் மற்றும் கடனாளி மன்றம்
  • இப்பதிவேடு நிகழ்நேர அடிப்படையில் ஏற்கெனவே கடன் வாங்கியுள்ள மற்றும் வருங்கால கடன் வாங்குபவர்களின் முழுமையான சுய விவரங்களைப் பெறுவதற்கு வங்கிகளுக்கும் நிதி நிறுவனங்களுக்கும் உதவிடும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்