இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது இ-ஆதாரில் பாதுகாப்பான எண்ணியல் முறையிலான QR குறியீட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
தனிநபரின் விவரங்களை சரிபார்க்க வசதியாக ஆதார் அட்டை உடைய நபரின் விவரங்களோடு அவரின் புகைப்படத்தையும் இந்த QR குறியீடு கொண்டிருக்கும்.
இந்த QR குறியீடு ஆனது இ-ஆதாரின் மேல்பகுதியில் (Cut away portion) அமைந்திருப்பதோடு தனிநபரின் விவரங்களையும் கொண்டிருக்கும்.
இந்த QR குறியீடு, தகவல்களை பாதுகாப்பாகவும் யாரும் திருடாமலும் வைத்திருப்பதற்காக இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் எண்ணியல் அடையாளத்தையும் (Digital Signature) கொண்டிருக்கும்.