TNPSC Thervupettagam

எண்ணெய் அகழகெடுப்பு - திப்ரு சாய்கோவா தேசியப் பூங்கா

February 14 , 2025 9 days 66 0
  • சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் வன ஆலோசனைக் குழு (FAC) ஆனது, ஆராய்ச்சி நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்ற ஒரு நிபந்தனையின் பேரில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தினை மேற்கொள்வதற்கு என்று பரிந்துரை செய்துள்ளது.
  • OIL நிறுவனத்தின் படி, இந்த ERD (அதிக செங்குத்து உயரத்தில் துளையிடுதல்) தொழில் நுட்பம் ஆனது மேற்பரப்பில் எந்தவித இடையூறும் செய்யாமல் சுமார் 3,500-4,000 மீட்டர் ஆழத்தில் துளையிட முடியும்.
  • கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், பாக்ஜன் எண்ணெய் வயலில் தற்போதுள்ள மூன்று கிணறுகளிலிருந்து இந்த ERD தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி திப்ரு சாய்கோவா தேசியப் பூங்காவிற்குள் ஏழு கிணறுகளைத் தோண்டுவதற்கான ஒரு திட்டத்தினை FAC நிராகரித்தது.
  • 2006 ஆம் ஆண்டில், தேசியப் பூங்காக்கள், சரணாலயங்கள் மற்றும் வனப்பகுதிகள் ஆகியவற்றுக்குள் "எந்த வகையாக இருந்தாலும்" சுரங்கம் தோண்டுவதற்கு அனுமதி அளிக்கப் படாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
  • 2023 ஆம் ஆண்டில், தேசியப் பூங்காக்கள் மற்றும் சரணாலயங்களைச் சுற்றி சுரங்கப் பணிகளை மேற்கொள்வதற்கான தடை மண்டலத்தை ஒரு கிலோமீட்டர் சுற்றுப் பகுதி வரை நீட்டித்தது.
  • 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆனது, தேசியப் பூங்காக்கள், சரணாலயங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழல் தாங்குந் திறன் மண்டலங்களுக்குள் தவிர, வன அனுமதியினைப் பெறுவதில் இருந்து இந்த ERD திட்டங்களுக்கு விலக்கு அளித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்