சவூதி அரேபியா மற்றும் OPEC+ அமைப்பின் பிற உறுப்பினர் நாடுகள், தங்களது எண்ணெய் உற்பத்தியை ஒரு நாளைக்கு சுமார் 1.16 மில்லியன் பீப்பாய்களாகக் குறைக்கப் போவதாக அறிவித்துள்ளன.
இந்த நடவடிக்கையானது சந்தையின் உறுதித் தன்மையை நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப் பட்டுள்ளதாக அந்நாடுகள் கூறுகின்றன.
இந்த குழுவில் 23 எண்ணெய் உற்பத்தி நாடுகள் உள்ளன.
முந்தைய ஆண்டில், அவற்றின் உற்பத்தியை ஒரு நாளைக்கு இரண்டு மில்லியன் பீப்பாய்கள் என்ற அளவில் அந்நாடுகள் குறைத்தன.