TNPSC Thervupettagam

எண்ணெய் உற்பத்தியைக் குறைத்தல் – OPEC

March 7 , 2020 1632 days 610 0
  • உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நாடுகளைக் கொண்ட அமைப்பான OPEC (பெட்ரோலியப் பொருள்கள் ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு - Organization of Petroleum Exporting Countries) ஆனது எண்ணெய் உற்பத்தியைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது.
  • OPEC அமைப்பின் முக்கிய உறுப்பினரான சவுதி அரேபியா நாடானது 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஒரு நாளைக்கு 1.5 மில்லியன் பீப்பாய் எண்ணெய் உற்பத்தியைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது.
  • எண்ணெய் விலைகள் சரிவடையாமல் இருக்க இந்தக் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.
  • உலகம் முழுவதும் நிகழ்ந்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் அதன் தாக்கம் காரணமாக எண்ணெய்த் தேவை குறையும் என்று கணித்து OPEC இந்த முடிவை எடுத்துள்ளது.
  • OPEC அமைப்பானது 5 உறுப்பு நாடுகளுடன் ஈராக்கில் உள்ள பாக்தாத்தில் நிறுவப்பட்டது.
  • தற்போது, இந்த அமைப்பானது மொத்தம் 14 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்