எண்ணெய் வயல்கள் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) திருத்த மசோதா, 2024
March 16 , 2025 24 days 52 0
மக்களவையானது 2024 ஆம் ஆண்டு எண்ணெய் வயல்கள்/கிணறுகள் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) திருத்த மசோதாவினை நிறைவேற்றியுள்ளது.
இந்த மசோதாவானது 2018 ஆம் ஆண்டு எண்ணெய் வயல்கள் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) சட்டத்தினை புதுப்பிக்க முயல்கிறது.
நிலக்கரி, லிக்னைட் மற்றும் ஹீலியம் ஆகியவை, 1957 ஆம் ஆண்டு சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப் படுவதால் அவை இந்த மசோதாவில் இருந்து வெளிப்படையாக விலக்கப்படுகின்றன.
இந்த மசோதாவானது, 'சுரங்கக் குத்தகைகள்' என்ற சொல்லினைத் தற்போது ஆய்வு, உற்பத்தி மற்றும் அகற்றல் நடவடிக்கைகளை நிர்வகிக்கச் செய்கின்ற 'பெட்ரோலியக் குத்தகைகள்' என்ற சொல்லாக மாற்றுகிறது.
இந்தப் புதிய மசோதாவானது, அதிகபட்ச அபராதத்தினை 25 லட்சமாக அதிகரித்து, சிறைத் தண்டனைக்குப் பதிலாக நிதி அபராதங்களை விதிக்கிறது.
இந்தியாவின் கச்சா எண்ணெய்த் தேவையானது, தற்போதைய சுமார் 5.5 மில்லியன் பீப்பாய்களில் இருந்து ஒரு நாளைக்குச் சுமார் 6.5-7 மில்லியன் பீப்பாய்களாக (bpd) உயரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.