சென்னை மாநகராட்சிக் குடிநீர் அமைப்பானது நகரத்தில் குடிநீர் நுகர்வோர்கள் மத்தியில் நீரின் நியாயமான பயன்பாட்டை உறுதி செய்வதற்காக வணிகக் கட்டிடங்களில் தானியங்கி மீட்டர் அளவீடுகளைக் (automated meter reading - AMR) கொண்ட டிஜிட்டல் நீர் மீட்டர்களைப் பொருத்துவதற்கான செயல்முறையைத் துரிதப் படுத்தியுள்ளது.
இந்தத் திட்டமானது பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியுதவியுடன் மேற்கொள்ளப் படுகின்றது.
நுகர்வோர்கள் தங்களது நீரின் பயன்பாட்டிற்கு ஏற்ப கட்டணத்தைச் செலுத்துவதற்காகவும் நீர் நுகர்வைக் கண்காணிப்பதற்காகவும் இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப் பட்டுள்ளது.