TNPSC Thervupettagam

எண்முறை நிர்ணய நாணயத்தை வெளியிடுவதற்கான ஆய்வு நடத்த துறைகளுக்கு இடையேயான குழு அமைப்பு

April 11 , 2018 2421 days 1509 0
  • ரிசர்வ் வங்கி தன்னால் ஆதரவு அளிக்கப்பட்ட எண்முறை நிர்ணய நாணயம் (Fiat Digital Currency) ஒன்றை வெளியிடுவதற்கான செயலாக்கம் மற்றும் வழிகாட்டுதல் ஆகியவற்றை ஆராய்வதற்கு துறைகளுக்கு இடையேயான குழு ஒன்றை அமைத்துள்ளது.
  • நிர்ணய நாணயம் என்பது அரசால் சட்டப்பூர்வமான நாணயம் என்று அறிவிக்கப்பட்டதாகும். இது சங்கேத பணம் எனப் பொருள்படும் கிரிப்டோ (Crypto currency) நாணயத்தைக் காட்டிலும் வித்தியாசமானதாகும். ஏனெனில் அதற்கு அரசின் ஆதரவு கிடையாது.

  • இங்கிலாந்து வங்கியே இந்த எண்முறை நிர்ணய நாணயத்தை அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகளை பற்றிய உலகளாவிய விவாதத்தை முதலில் தொடங்கிய நிறுவனம் ஆகும்.
  • 2017ம் ஆண்டு நவம்பர் மாதம், உருகுவேயின் மத்திய வங்கி எண்முறையிலான உருகுவேயின் பெசோ (Pesos) நாணயங்களை வெளியிட ஆய்வு செய்யப் போவதாக அறிவித்து இருந்தது.
  • எண்முறை நிர்ணய நாணயம் அல்லது மத்திய வங்கியின் எண்முறை நாணயம் என்பது நிர்ணய நாணயத்தின் எண்முறை வடிவம் ஆகும். இந்த நாணயம் அரசின் ஒழுங்குமுறை அல்லது சட்டப்படி ஏற்படுத்தப்பட்ட ஒன்று ஆகும்.
  • தனியார்களின் எண்முறை அடையாள வில்லைகளோடு ஒப்பிடும் போது, எண்முறை நிர்ணய நாணயம் ஆனது மத்திய வங்கியால் வெளியிடப்படும்.
  • எண்முறை நிர்ணய நாணயம், மத்திய வங்கியின் பொறுப்புடைமையைக் கொண்டிருப்பதோடு, பெருவாரியாக உபயோகிக்கப்படும் காகித மற்றும் உலோக நாணயங்களோடு சேர்த்து புழக்கத்தில் இருக்கும்.
  • பிட்காயின் (Bitcoin) போன்ற ஒழுங்குப்படுத்தப்படாத இணைய நாணயங்களுக்கு முதுகெலும்பு போன்று இருக்கும் கறுப்புச் சங்கிலி தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த எண்முறை நிர்ணய நாணயங்கள் அமைந்து இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்