ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் வராஹா நதிக்கரையோரத்தில் அமைந்துள்ள எதிகோப்பக்கா கிராமத்தின் கைவினை கலைஞர்களால் இந்த பராம்பரிய பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன.
ஆந்திராவிலிருந்து GI குறியீடு பெற்றுள்ள கொண்டப்பள்ளி பொம்மைகள், போப்பிலி வீணை, திருப்பதி லட்டு, ஸ்ரீகாளஹஸ்தி கலம்காரி, உப்படா ஜம்தானி சேலைகள், நிழற்பொம்மைகள் பட்டியலில் தற்போது இப்பொம்மைகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
மென்மைத் தன்மையுடைய அன்குடி கர்ரா மரத்தின் கட்டைகளிலிருந்து உருவாக்கப்படும் இந்த பொம்மைகள் செய்யும் கலையானது 400 வருட பழமையானது. இவை turned wood Lacquer கலை எனவும் அழைக்கப்படும்.
2017-18-ல் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ள வேறு பொருட்களாவன
பொச்சம்பள்ளி ஐகாட் சேலைகள்-தெலுங்கானா
கோபிந்தோபாக் அரிசி - மேற்கு வங்கம்
துர்கி கற்சிற்பங்கள்
சக்சேஷாங் சால்வை-நாகாலாந்து
காஷ்மீர் பாஷ்மினா கம்பளம்
நாக்பூர் ஆரஞ்சு- நாக்பூர்
காங்க்ரா ஓவியங்கள்- இமாச்சலப் பிரதேசம்
பங்கனப்பள்ளி மாம்பழம் – ஆந்திரப் பிரதேசம்
திருப்பதி லட்டு–ஆந்திரா
டார்ஜிலிங் தேயிலை-மேற்கு வங்கம்
துலபாஞ்சி அரிசி - மேற்கு வங்கம்
புவிசார் குறியீடு (Geographical Indication )
புவியின் ஒரு குறிப்பிட்ட இடத்தையோ அல்லது தோற்றத்தையோ குறிப்பிடும் பொருட்களுக்கு அங்கீகரிப்பு தரும்வகையில் அவற்றின் மீது பயன்படுத்தப்படும் ஓர் பெயர் அல்லது சின்னமே புவிசார் குறியீடு எனப்படும்.
சிறப்பு தரங்களும், சொந்த இடத்தின் நன்மதிப்பையும் உடைய வேளாண் பொருட்கள், இயற்கை மற்றும் தயாரிப்புப் பொருட்களுக்கு இக்குறியீடு இந்திய காப்புரிமை அலுவலகத்தால் வழங்கப்படுகிறது.
புவிசார் குறியீட்டு அடையாளம் 10 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கது. அதற்கு பிறகு பதிவுப் புதுப்பிப்பு தேவை.
தொழிற்துறை சொத்துக்கள் பாதுகாப்பிற்கான பாரிஸ் ஒப்பந்தத்தின் (Paris Convention For Protection of Industrial Property) கீழ் அறிவுசார் சொத்துரிமையின் ஒரு பகுதியாக GI உட்சேர்க்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில், உலக வர்த்தக நிறுவனத்தின் (WTO-World Trade Organisation) அறிவுசார் சொத்துரிமைகளின் வணிகம் தொடர்பான அம்சங்கள் குறித்த ஒப்பந்தத்தால் (TRIPS-Agreement On Trade-Related Aspects of Intellectual Property Rights) GI நிர்வகிக்கப்படுகிறது.
இந்தியாவில் GI 1999-ஆண்டின் பல வகை பொருட்களுக்கான புவிசார் குறியீடுகள் மற்றும் பாதுகாப்பு சட்டத்தின் (Geographical Indications of Goods (Registration and Protection Act,1999-GI Act) கீழ் வழங்கப்படுகிறது.