அறிவியலாளர்கள், முதன்முறையாக ஒரு செயல்முறையில் சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்தி எதிரிணை நியூட்ரினோ துகள்களை (ஆன்டிநியூட்ரினோ) தற்செயலாக கண்டுபிடித்துள்ளனர்.
அவை 240 கிலோமீட்டர் (150 மைல்) தொலைவில் உள்ள அணு உலையிலிருந்து தோன்றியவையாகும்.
இந்தக் கண்டுபிடிப்பானது, நியூட்ரினோ பரிசோதனைகள் மற்றும் மலிவான, எளிதில் பெறக் கூடிய மற்றும் பாதுகாப்பானப் பொருட்களைப் பயன்படுத்தும் கண்காணிப்பு தொழில்நுட்பத்திற்கான உறுதியளிப்பினை வழங்குகிறது.