TNPSC Thervupettagam

எதிர் பருப்பொருள் ஈர்ப்பு விசைக்கு உட்படுதல்

December 11 , 2023 222 days 161 0
  • உலகின் மிகப்பெரிய துகள் தூண்டுதல் நுட்ப நிறுவனமான CERN, எல்லா பொருட்களைப் போலவே, எதிர் பருப்பொருள்களும் ஈர்ப்பு விசையின் காரணமாக கீழே விழுகிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
  • எதிர் பருப்பொருள் என்பது வழக்கமான பருப்பொருளை போலவே ஒரே மாதிரியான நிறை கொண்ட ஆனால் எதிர் மின்னூட்டம் கொண்ட புதிரான இரட்டை வடிவமாகும்.
  • எலக்ட்ரான்கள் மற்றும் புரோட்டான்கள் போன்ற அனைத்து சார்பு அணுத் துகள்களும் எதிர் பருப்பொருள் கூறினைக் கொண்டுள்ளன.
  • எலக்ட்ரான்கள் எதிர்மறையாக மின்னூட்டம் பெற்றிருந்தாலும், எதிர் பருப்பொருளின் எலக்ட்ரான்கள் நேர்மறையாக மின்னூட்டம் பெற்றுள்ளன.
  • அதேபோல், புரோட்டான்கள் நேர்மறையாக மின்னூட்டம் பெற்றிருந்தாலும், எதிர் பருப்பொருளின் புரோட்டான்கள் எதிர்மறையாக மின்னூட்டம் பெற்றுள்ளன.
  • ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கோட்பாடு, அனைத்து நிறைகளும், அவற்றின் உள் கட்டமைப்புகளில் உள்ள வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல், ஈர்ப்பு விசைக்கு ஒரே மாதிரியாக எதிர்வினையாற்றுகின்றன என்று கணித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்