TNPSC Thervupettagam

எதிர்கால இயங்குதிறன்களுக்கான பூங்கா மற்றும் ஆடைத் தயாரிப்பு பூங்கா – தமிழக அரசு

September 3 , 2021 1241 days 647 0
  • விருதுநகர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த ஆடைத் தயாரிப்புப் பூங்கா, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயங்குதிறன் பூங்கா (mobility park)  மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் SIPCOT தொழில்துறைப் பூங்கா ஆகியவை தமிழகச் சட்டமன்றத்தில் தமிழக அரசினால் அறிவிக்கப் பட்ட முக்கிய அறிவிப்புகளுள் இடம் பெற்றுள்ளன.
  • விருதுநகர் மாவட்டத்திலுள்ள குமாரலிங்கபுரத்தில் திறக்கப்பட உள்ள ஆடைத் தயாரிப்புப் பூங்காவானது தென் மாவட்டங்களில் பொருளாதார மேம்பாட்டினை அதிகரிக்கும்.
  • கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சூளகிரியில் ஒரு எதிர்கால இயங்குதிறன் பூங்காவினைத் திறப்பதற்கான SIPCOT நிறுவனத்தின் இந்த முயற்சியானது இந்தியாவிலேயே இது போன்ற வகையிலான முதல்  முயற்சியாகும்.
  • திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஊத்துக்கோட்டை அருகேயுள்ள செங்காந்தகுளம் என்னுமிடத்தில் அமைக்கப்பட உள்ள SIPCOT தொழில்துறைப் பூங்காவானது சுமார் 3,000 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பினை நல்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள நெமிலி என்னுமிடத்தில் “Ready Built Factory” என்ற ஒரு தொழிற்சாலையை அரசு நிறுவ உள்ளது.
  • கரூர் மாவட்டத்தில் ஒரு அதிநவீன ஜவுளிப் பூங்காவானது திறக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்