எதிர்கால நகரங்களுக்கு நிதியளிப்பதற்கான G20 அமைப்பின் கோட்பாடுகள்
August 11 , 2023 473 days 223 0
G20 அமைப்பின் உள்கட்டமைப்புப் பணிக் குழுவின் மூன்றாவது கூட்டத்தில், 2023 ஆம் ஆண்டு உள்கட்டமைப்புச் செயல்பாட்டு நிரல்களுக்கானப் பணி நெறிமுறைகளை நோக்கியச் செயல்பாடுகளில் உள்ள கணிசமான முன்னேற்றம் குறித்து விவாதிக்கப் பட்டது.
இந்தக் கூட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட்டு முதன்மையாக விவாதிக்கப்பட்ட ஒரு கருத்து, ‘எதிர்கால நகரங்களுக்கான நிதியுதவி: உள்ளார்ந்த, நெகிழ்திறன் மிக்க மற்றும் நிலையான நகரங்கள்’ என்பதாகும்.
G20 அமைப்பு நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் (FMCBGs) மூன்றாவது கூட்டம் ஆனது காந்தி நகரில் நிறைவடைந்தது.
G20 அமைப்பிற்கான இந்தியத் தலைமைத்துவத்தின் கீழ் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற முதல் கூட்டத்தின் போது அமைக்கப்பட்டச் செயல்பாட்டு நிரலின் அடிப்படையில், பல்வேறு முக்கிய உலகளாவிய நிதி சார் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளில் இந்தச் சந்திப்பு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்தது.
பன்னாட்டு மேம்பாட்டு வங்கிகளிடம் (MDBs), நிதி வழங்கீடு மற்றும் கடன் வாங்கும் நாடுகள் அவற்றின் கடன் வழங்கும் நடவடிக்கைகளை நன்கு விரிவுபடுத்துவதற்கான கோரிக்கைகளை அதிகளவில் முன்வைத்து வருகின்றன.