CERN எனப்படும் ஐரோப்பிய அணு ஆராய்ச்சி அமைப்பானது மூன்று மடங்கு பெரிய (மற்றும் வேகமான) எதிர்கால நுட்ப வகையிலான வட்ட வடிவ மோதுவிக் கருவியை (FCC) உருவாக்க திட்டமிட்டுள்ளது.
FCC என்பது 91-கிலோமீட்டர் வளையத்திற்குள் அமைந்த ஒரு துகள் முடுக்கி ஆகும் என்பதோடு இது ஒரு பெரிய ஹாட்ரான் மோதுவியை விட மூன்று மடங்கு சுற்றளவைக் கொடுக்கும்.
FCC ஆனது “2045 ஆம் ஆண்டின் முதல் பாதியில் செயல்படத் தொடங்கும்.
100 டெரா எலக்ட்ரான் வோல்ட்களின் மோதல் ஆற்றல்களை அடையும் நோக்கத்துடன், துகள் மோதல்களின் ஆற்றல் மற்றும் தீவிர வரம்புகளை அதிகரிப்பதே FCC என்றக் கட்டமைப்பின் குறிக்கோள் ஆகும்.