TNPSC Thervupettagam

எதிர்கால யூனிகார்ன் நிறுவனங்கள் குறியீடு 2022

July 8 , 2022 871 days 393 0
  • 2022 ஆம் ஆண்டின் ஹுருன் இந்தியா எதிர்கால யூனிகார்ன் நிறுவனங்கள் என்ற குறியீடானது ஹுருன் ஆராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.
  • இந்தக் குறியீட்டின்படி, அடுத்த இரண்டு அல்லது நான்கு ஆண்டுகளில் இந்தியாவில் 122 புதிய யூனிகார்ன் நிறுவனங்கள் உருவாகும்.
  • அடுத்த இரண்டு ஆண்டுகளில் யூனிகார்ன் நிறுவனமாக மாறக்கூடிய நிறுவனங்கள் கேசெல்லெஸ் என்று அழைக்கப் படும்.
  • கேசெல்லெஸ் நிறுவனத்தின் மதிப்பு 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதல் 1 பில்லியன் டாலர் வரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • அடுத்த நான்கு ஆண்டுகளில் யூனிகார்ன் நிறுவனமாக மாறக்கூடிய தொடக்க நிறுவனம் சீட்டாஸ் ஆகும்.
  • ஒரு யூனிகார்ன் நிறுவனம் என்பது 1 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான மதிப்பைக் கொண்ட ஒரு தனியார் தொடக்க நிறுவனமாகும்.
  • இந்தச் சொல் முதன்முதலில் 2013 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
  • இந்தச் சொல்லானது துணிகர முதலீட்டாளர் அய்லின் லீ என்பவரால் உருவாக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்