எதிர்காலத்திற்கான புத்துணர்வு கொண்ட எண்ணியல் உள்கட்டமைப்பிற்கான பிராந்திய மாநாடு
May 11 , 2018 2393 days 771 0
4-வது எதிர்காலத்திற்கான புத்துணர்வு கொண்ட எண்ணியல் உள்கட்டமைப்பிற்கான பிராந்திய மாநாடு பெங்களூருவில் நடத்தப்பட்டது.
இந்த இரண்டு நாள் மாநாடு இந்திய அரசின் நிதித்துறை அமைச்சகத்தால் இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு (Confederation of Indian Industry - CII) மற்றும் வளரும் நாடுகளுக்கான ஆராய்ச்சி மற்றும் தகவல் அமைப்பு முறை (Research and Information System for Developing Countries - RIS) ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்பட்டது.
மும்பையில் 2018-ஆம் ஆண்டு, ஜுன் மாதம் 25 மற்றும் 26 தேதிகளில் இந்திய அரசால் நடத்தப்பட இருக்கும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (Asian Infrastructure Investment Bank - AIIB) மூன்றாவது வருடாந்திர கூட்டத்திற்கு முன்னோட்டமாக இந்த மாநாடு பார்க்கப்படுகின்றது.