சீனா, மலேசியா, சவுதி அரேபியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து சூரிய ஒளியை உற்பத்தி செய்ய மின்கலன்களில் பயன்படுத்தப்படும் பொருட்களின் இறக்குமதி மீது டன்னுக்கு USD 1559 வரை எதிர்க் குவிப்புத் தடுப்பு வரியை ஐந்து ஆண்டு காலத்திற்கு இந்தியா விதித்துள்ளது.
மேற்குறிப்பிட்ட நாடுகளிலிருந்து மிகக் குறைவான விலையில் எத்திலீன் வினைல் அசிட்டேட் தாள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இது சூரிய ஒளி மின்கலங்களைத் தயாரிக்கும் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
வணிக அமைச்சகத்தின் விசாரணை அமைப்பான வணிகத் தீர்வுகளுக்கான பொது இயக்குனரகத்தின் (Directorate General of Trade Remedies - DGTR) பரிந்துரையின் அடிப்படையில் இந்த எதிர்க் குவிப்புத் தடுப்பு வரி விதிக்கப்படுகின்றது.
எதிர்க் குவிப்புத் தடுப்பு வரியானது நியாயமான வணிக நடைமுறைகளை உறுதி செய்வதையும் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு ஒரு சரியான தளத்தை உருவாக்குவதையும் நோக்கங்களாகக் கொண்டுள்ளது.