TNPSC Thervupettagam

எதிர்பாராத தொற்றுநோய் தயார்நிலை மற்றும் வர்த்தக தாக்கம்

January 21 , 2019 2137 days 725 0
  • உலகப் பொருளாதார மன்றமானது (WEF – World Economic Forum) சமீபத்தில் எதிர்பாராத தொற்றுநோய் தயார்நிலை மற்றும் வர்த்தக தாக்கம் என்ற அறிக்கையை வெளியிட்டது.
  • இந்த அறிக்கையின் மீதான வெள்ளை அறிக்கையானது உலகளாவிய ஹார்வர்டு சுகாதார நிறுவனத்துடன் இணைந்து WEF-ஆல் வெளியிடப்பட்டது.
  • இந்த வெள்ளை அறிக்கையின் விவரங்களானது சமுதாயத்தின் மீது தொற்று நோய்களின் தாக்கம் மற்றும் அச்சுறுத்தலை மேலாண்மை செய்ய வர்த்தக சமூகமானது ஏன் மற்றும் எப்படிப்பட்ட பங்களிப்புகளை அளிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது.
  • முக்கியமான கண்டுபிடிப்புகளாவன
    • கடந்த 30 ஆண்டுகளில் தொற்று நோய்களின் எண்ணிக்கை மற்றும் அதன் வகைகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளன.
    • 2011 ஆம் ஆண்டிலிருந்து உலகம் முழுவதும் ஆண்டுதோறும் 200 தொற்றுநோய் நிகழ்வுகள் காணப்படுகின்றன.
    • உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சராசரியாக 0.7% ($ 570 பில்லியன்) அளவிற்கு வருடாந்திரப் பொருளாதார இழப்புகளுக்கு இந்த தொற்று நோய்கள் காரணமாகின்றன.
    • இது வரும் பத்தாண்டு காலங்களில் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் அச்சுறுத்தல் மதிப்பீட்டிற்கு நிகரானது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்