TNPSC Thervupettagam

எதிர்பாராத விதமான சூழல்களால் எளிதில் ஏற்படக் கூடிய சேதத்திற்கான இழப்பீட்டு விதி

May 6 , 2024 74 days 135 0
  • ‘எதிர்பாராத விதமான சூழல்களால் எளிதில் ஏற்படக் கூடிய சேதத்திற்கான இழப்பீட்டு விதி - முட்டை ஓடு போன்ற மண்டை ஓடு’ என்ற சட்டக் கோட்பாடு தவறாகப் பயன்படுத்தப் பட்டதைக் கண்டறிந்து, மருத்துவம் சார்ந்த அலட்சியச் செயல்பாடு வழக்கில் மாவட்ட நுகர்வோர் மன்றம் வழங்கிய 5 லட்ச ரூபாய் இழப்பீட்டை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
  • எதிர்பாராத விதமான சூழல்களால் எளிதில் ஏற்படக் கூடிய சேதத்திற்கான இழப்பீடு விதி என்பது உரிமையியல் வழக்குகளில் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான சட்டக் கொள்கையாகும்.
  • அடிப்படையில், காயமடைந்த நபரின் தனிப்பட்ட உடல் நிலைமைகள் மற்றும் அதனைத் தீவிரமடைய செய்யக்கூடிய அனைத்துச் செயல்களுக்கும் அதன் காயங்களுக்கும் அறிந்தே செய்யப்படவில்லை என்றாலும் அதற்குக் குற்றவாளியே பொறுப்பாவார்.
  • எளிமையாகச் சொன்னால், பாதிக்கப்பட்டவருக்கு குறிப்பாக மென்மையான மண்டை ஓடு அல்லது ‘முட்டை ஓடு’ போன்ற மண்டை ஓடு இருந்தாலும், ஒரு நபரின் தலையில் அடிக்கும் போது ஏற்படும் காயங்களுக்கு பிரதிவாதியே பொறுப்பேற்க வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்