எந்தவொரு உயிரினமும் வசிக்காத பகுதி - டல்லோல், எத்தியோப்பியா
November 26 , 2019
1829 days
656
- எத்தியோப்பியாவில் உள்ள டல்லோல் புவிவெப்பப் பகுதியில் எந்தவொரு உயிரினமும் வசிக்காத ஒரு நீர்வாழ் சூழல் அமைப்பை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
- டல்லோல் புவிவெப்பப் பகுதியில் சூடான, உப்புத் தன்மையுடைய, அதிக அமிலம் கொண்ட குளங்களில் எந்த வகையான நுண்ணுயிரிகளும் காணப் படவில்லை.
- டல்லோல் பகுதியானது பூமியின் வறண்ட மற்றும் வெப்பமான இடங்களில் ஒன்றாகக் கருதப் படுகின்றது.
- மேலும் இது கடல் மட்டத்திலிருந்து 125 மீ (410 அடி) கீழே அமைந்துள்ள மிகத் தாழ்வான நிலப்பரப்புகளில் ஒன்றாகும்.
- ஒரு கிரகத்தில் நீர் இருப்பது மட்டுமே உயிர் வாழ்வதற்குத் தகுதியானதாக இருக்காது என்று இந்த ஆராய்ச்சி எடுத்துக் காட்டுகின்றது.
Post Views:
656