சஞ்சய் தர்வாட்கர் “டயமண்ட் இன் மை பாம்” (என் உள்ளங்கையில் உள்ள வைரம்) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
இந்தப் புத்தகமானது உலகின் மிகப்பெரிய 12 வைரங்கள் ஆந்திராவின் கோல்கொண்டா மற்றும் கொல்லூர் சுரங்கங்களில் இருந்து எவ்வாறு உருவானது என்பதையும் பின்னர் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு எவ்வாறு அவை முகலாயர்கள், பாரசீகர்கள், ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள், துருக்கியர்கள் மற்றும் ரஷ்யர்கள் ஆகியோரால் எடுத்துச் செல்லப்பட்டு அவர்களின் தேசியப் பொக்கிஷங்களில் ஒன்றாக இப்போது அவை விளங்குவதைப் பற்றியும் விவரிக்கின்றது.
இந்தப் புத்தகத்தில் பட்டியலிடப்பட்டுள்ள முக்கியமான வைரங்கள்
கோஹினூர் (இப்போது லண்டனில் உள்ளது),
இளஞ்சிவப்பு நிற தர்யா-இ-நூர் (இப்போது டெஹ்ரானில் உள்ளது),
வெளிர் நிற, தட்டையான வடிவமுடைய ஷா வைரம் மற்றும் அரை முட்டை கண் வடிவ, நீல-பச்சை நிற ஆர்லோவ் வைரம் (இரண்டும் இப்போது கிரெம்ளினில் உள்ளது),
ஹோப் வைரம் எனப்படும் நீல நிற வைரம் (இப்போது ஸ்மித்சோனியனில் உள்ளது).