நாட்டில் முதல் முறையாக, கரூர் வைசியா வங்கியானது கரூரில் முன்பணம் செலுத்தப்பட்ட ஒரு அட்டையான “என் காசு” என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கி உள்ளது.
இந்திய அரசின் டிஜிட்டல் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக இந்த வங்கியானது கரூரில் “பணப் புழக்கத்தைக் குறைத்தல்” என்ற ஒரு முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது. இது கரூர் மாவட்டத்தில் பணப் புழக்கத்தின் பயன்பாட்டைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கரூரைச் சேர்ந்த கரூர் வைசியா வங்கியானது 104 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப் பட்டதாகும்.