நாட்டின் முதலாவது தேசிய கல்வி உதவித் தொகை வாயில் (National Scholarship Portal) கைபேசி செயலியை மத்திய சிறுபான்மை நல அமைச்சர் வெளியிட்டார்.
இது ஏழ்மை மற்றும் பின்தங்கிய பிரிவைச் சார்ந்த மாணவர்களுக்காக சீரான, அணுகக்கூடிய மற்றும் தடையற்ற உதவித் தொகை அமைப்பை உறுதி செய்யும்.
இச்செயலியின் மூலம் மாணவர்கள் பல்வேறு உதவித் தொகைகள் குறித்த தகவல்களைப் பெற முடியும். மேலும் இச்செயலியின் மூலம் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கவும் கோப்புகளை பதிவேற்றம் செய்யவும் விண்ணப்பத்தின் நிலையை அறியவும் உதவித் தொகை வழங்கியதன் நிலையையும் மாணவர்கள் அறிய முடியும்.